நா முத்துக்குமார் அவர்கள்,விகடன் நேர்காணலில்..
'''ஆனந்த யாழை...’ பாட்டுக்கான முதல் அங்கீகாரத்தைத் தொடங்கி வெச்சதே, 'ஆனந்த விகடன்’தான். விகடன் விருதைத் தொடர்ந்து நார்வே இன்டர்நேஷனல் ஃபெஸ்டிவலில் சிறந்த பாடலாகத் தேர்வு, பிறகு தேசிய விருது'' - மெல்லியச் சந்தோஷத்தோடு பேசுகிறார் நா.முத்துக்குமார்.
''விருது செய்தி வந்த 10-வது நிமிடத்தில் யுவனிடம் இருந்து வாழ்த்துச் செய்தி. 'உங்களால்தான் இந்த விருது’னு நன்றி சொன்னேன். 'உங்கள் வரிகளுக்குக் கிடைத்த விருது’ என்றார். 'உடலையும் உயிரையும் தனியாப் பிரிக்க முடியாதே. உங்களுக்கும் கிடைச்சிருக்கணும். அடுத்தமுறை 'தரமணி’க்காகச் சேர்ந்து வாங்குவோம்’ என்றேன். சந்தோஷப்பட்டார்.