'Semma' post by
Director Ram sir in is FB page
இயேசுதாஸின் அய்யப்பப் பாடல்களை கேட்டுத்தான்
குறிப்பிட்ட மாதத்தில் நீங்கள் கண் விழிக்கிறீர்கள்.
மொஹமத் சமியின் பந்து வீச்சில் விக்கெட் சரியும் போது
நீங்கள் கை தட்டத்தான் செய்கிறீர்கள்.
அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது
நீங்கள் நாட்டை விட்டு வெளியேற வில்லை.
உமர்கயாமின் பாடல்கள் குறித்தான கேள்விகளுக்கு
நீங்கள் பதில் அளித்தே தேர்வாகி வந்திருக்கிறீர்கள்.
பிரதமர். நரேந்தர மோடி சுபாஷ் சந்திர போஷோடு போராடிய கர்னல்.நிஜாமுதீனின் காலில் விழுந்ததற்காக
நீங்கள் அவரைச் சபிக்கவில்லை.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என ஏ.ஆர்.ரகுமான்
ஆஸ்கார் மேடையில் சொன்ன போது ஆஸ்கார் மேடையில் தமிழ் ஒலித்தது என்று நீங்கள் சந்தோசப்பட்டீர்கள்.
இவை எல்லாம் இப்படி இருக்க
யுவன் தனக்கான மன அமைதியை ’ அல்லா ’ தந்தார்
என்று நம்புவதில் உங்களுக்கு என்ன வருத்தம்?
அவரின் தனிப்பட்ட உணர்வில் தலையிட
நமக்கு ஏது உரிமை?
இன்று யுவனின் பிறந்த நாள்.
அந்த அழகான கனிவான
கலைஞனுக்கு என்னுடன் இணைந்து
நீங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களைப்
பகிரவேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..யுவன்...
பிரியங்களுடன்
ராம்.
ஆகஸ்ட் 31
சென்னை.