Wednesday, 19 March 2014

Rajini’s Maruuruvam Ajith! – Says Simbu

ரஜினியின் மறுஉருவம் அஜீத்! – சொல்கிறார் சிம்பு – Dinakaran


Rajini's Maruuruvam Ajith! - Says Simbu


சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிம்பு. பின்னர் மாஸ்டர் ஆனபோது, தனது பெயருக்கு முன்னால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக்கொண்டார். அதற்கேற்ப சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகராகவும இருந்தவர் சிம்பு. ரஜினி படங்கள் வருகிறதென்றால் முதல் நாளே தியேட்டருக்கு சென்று விசில் அடித்தபடி பார்த்து ரசித்தவர்.


ஆனால், தானும் சினிமாவில் ஹீரோவான பிறகு, திடீரென்று ரஜினியில் இருந்து அஜீத்துக்கு மாறி விட்டார். எப்படி ரஜினி படங்களை முதல் நாளே முதல் ஷோ பார்க்கும் ரசிகராக இருந்து வந்தாரோ அதேபோல் பின்னர் அஜீத் படங்களைப்பார்க்கத் தொடங்கினார். நான் அஜீத்தின் ரசிகன் என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்து வந்தார்.


ஆனால் இப்போது ரஜினியில் இருந்து தான் அஜீத் ரசிகனாக மாறியது ஏன் என்பது பற்றி அவர் கூறுகையில், ரஜினியின் மறு உருவம் அஜீத் என்று கூறியுள்ள சிம்பு, அஜீத்தான் என்னைப்பொறுத்தவரை ரியல் ஹீரோவாக தெரிகிறார். மேலும், அஜீத்தின் வாரிசாக தன்னை தானே பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.