யுவனுக்குப் பிடித்தது மூன்று விஷயங்கள்... இசை, இசை மற்றும் இசை!
சகோதர-சகோதரிகள்தான் யுவனின் ரிலாக்ஸ் தோழர்கள். கிரிக்கெட் பிடிக்கும். கார் டிக்கியிலேயே பேட், ஸ்டெம்ப், பந்து எல்லாம் இருக்கும். நேரம் கிடைத்தால் சந்துகளில்கூட 'ஸ்ட்ரீட் கிரிக்கெட்’ ஆடத் தொடங்கிவிடுவார். தீவிர வீடியோ கேம்ஸ் பிரியர். பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ், பென்ஸ் என இரு கார்கள் வைத்திருக்கிறார். நீண்ட தூரப் பயணங்களின்போது, செல்ஃப் டிரைவிங்தான் இஷ்டம். அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் இடையிலான மனஸ்தாபம், வெங்கட் பிரபு, பிரேம்ஜி உடனான நட்பை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக்கொள்வார்.
யுவன், அம்மா பிள்ளை. இடைநில்லா இசைப் பணிகளுக்கு மத்தியில் அப்பாவின் அரவணைப்பு இல்லாமல், மகன்கள் ஏங்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து பார்த்துக்கொண்ட அம்மா ஜீவாவின் மறைவு, யுவனுக்கு பேரிழப்பு. அந்த இழப்பில் இருந்து மீள, நிம்மதி தேடியபோதுதான் இஸ்லாம் மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டிருக்கிறார். 'நான் முஸ்லிமாக மாறிவிட்டேன்’ என அறிவித்துவிட்டு அந்த மதம் பற்றிய உள்ளார்ந்த விஷயங்களை அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகிறார். 'மனரீதியாக நான் ஒரு முஸ்லிம்தான். அதற்காக பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை’ என நெருக்கமான நண்பர்களிடம் சொல்லியிருக்கிறார். வெள்ளிக்கிழமைதோறும் தவறாமல் தி.நகர் மசூதிக்குச் சென்று வருகிறார்.
பெர்சனலாக விரைவிலேயே ஒரு நல்ல செய்தி சொல்வார் யுவன் என்கிறார்கள். அது என்ன யுவன்?!
Credits : Vikatan