Wednesday, 29 October 2014

#IdamPorulYeval - Director Seenu Ramasamy about Yuvan's music.. "அதிசயமா இசைக்க...

#IdamPorulYeval - Director Seenu Ramasamy about Yuvan's music..



"அதிசயமா இசைக்கு யுவன் - வைரமுத்து கூட்டணி பிடிச்சுட்டீங்க. பாடல்களில் என்ன விசேஷம்?"



டைரக்டர் சீனு ராமசாமி:

" நான் யுவன் ஷங்கர் ராஜா ரசிகன். அவர் இந்தப் படத்துக்கு மியூசிக் பண்ணா நல்லா இருக்கும்னு தயாரிப்பாளர்கள் லிங்குசாமி, போஸ்கிட்ட சொன்னேன். 'தாராளமாக் கேட்டுப்பாருங்க'னு சொன்னாங்க. யுவன்கிட்ட கதை சொன்னேன். அவருக்கு பிடிச்சிருந்தது. "வைரமுத்து பாட்டு எழுதினா நல்லா இருக்கும்'னு சொன்னேன். சின்னதா யோசிச்சார்... "அவருக்கு சம்மதம்னா, எனக்கு ஒ.கே. ஆனா அவர் ஒப்புக்குவாரானு தெரியலையே'னு சொன்னார். "நிச்சயமா எழுதுவார்"னு சொல்லிட்டு, "யுவன் இசையமைக்கிறார். நீங்க பாட்டு எழுதுவீங்களா"னு கவிஞரிடம் கேட்டேன். "தாராளமா எழுதலாமே"னு சொன்னார். ரெண்டு பேரும் ரெண்டு தடவை சந்திச்சாங்க. அப்புறம் யுவன் டியூன் கொடுத்தார். வைரமுத்து எழுதினார்.



" அந்துவானக் காட்டுக்கு

தப்பி வந்த ஆட்டுக்கு

தாய் மடி அமைஞ்சுதடா..

கல்லிருக்கும் தேரைக்கும்

உள்ளிருக்கும் வாழ்வுண்டு

உனக்கொண்ணு வாய்த்ததடா... னு படக் கதையை நாலு வரில அடக்கிட்டார் கவிஞர். அந்தப் பாட்டை யுவனே பாடினார். அழகா அமைஞ்சுருக்கு ஆல்பம்."



டைரக்டர் சீனு ராமசாமி நேர்காணல், ஆனந்த விகடன் (05.11.2014)