Wednesday, 26 November 2014

Bharathiraja sir about Yuvan in his next project :) "ஓம்"...... 'ஓல்ட் மேன்'னு...

Bharathiraja sir about Yuvan in his next project :)



"ஓம்"...... 'ஓல்ட் மேன்'னு அர்த்தம். பியூட்டிபுல் டைட்டில் யு நோ! நான் நடிக்கிறதுக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது. ஒரு சின்னப் பொண்ணுக்கும் ஒரு கெழவனுக்குமான உணர்ச்சிப் போராட்டம்தான் படம். ரொம்ப அற்புதமான ஸ்க்ரிப்ட். அவன் சின்னப் பிள்ளை மாதிரி இருப்பான். அவ பெரிய மனுஷி மாதிரி இருப்பா. இந்தியாவுல இருந்து ரிட்டையர்டு ஆகி அமெரிக்கா போறான் கெழவன்... அவ அங்கேயே இருக்கிறவ. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எப்படி ஃபேஸ் பண்ணிக்கிறாங்க. ஹவ் தே டிராவல் டுகெதர்... அவ்வளவுதான்... ஒரு மியூசிக்... ஒரு மேஜிக். ஆனா, நிச்சயம் 'முதல் மரியாதை' சாயல் இருக்காது!



படத்துக்கு யுவன் மியூசிக் பண்றான். பார்க்கும்போதெல்லாம், "அங்கிள், உங்க படம் எப்போ மியூசிக் பண்றது"னு கேட்டுட்டே இருப்பான். "இருடா, உங்க அப்பன்கிட்ட இன்னும் சில ஜோலி இருக்கு. முடிச்சுட்டு வரேன்"ன்னு சொல்லிட்டே இருந்தேன். இப்பத்தான் நேரம் வந்திருக்கு. கூப்பிட்டேன். "ஆரம்பிச்சுடலாம் அங்கிள்"னு உடனே வந்துட்டான்!"



இயக்குநர் பாரதிராஜா நேர்காணல், ஆன்ந்த விகடன் (03.12.2014)